ஆன்றோர் அருளுரைகள்

1. குடும்பத்தினர் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்து வந்தால் அந்தக்குடும்பம் எப்போதும் செழிப்பாக இருக்கும்.


2. தனக்கென வாழாமல் பிறக்கென வாழ்பவர்களே உயர்ந்த மனிதர்கள்.


3. மதம் என்பது கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதல்ல. கடவுளைப் போல மக்களை மாற்றுதாகும். உங்களது குற்றங்களை எடுத்துக் சொல்லும் மனிதர்களிடம் நீங்கள் நன்றியுள்ளவராக இருக்கவேண்டும். துன்பம் என்பது இறைவனின் வரப்பிரசாதம். அது நமக்குத் தரப்படும் பாடமாகும். உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ அவ்வளவு உயிருக்குப் பிரார்த்தனையும் தியானமும் அவசியமாகும். செயலும் அதற்கான விளைவும் சமமாக இருக்கும். எனவே யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காதீர்கள்.தூய்மையான மனம் உடையவர்கள் கண்ணுக்கு அனைத்தும் தூய்மையாகவே தெரியும்தர்ம வழியில் வாழ்வு நடத்தினால் ஒவ்வொரு நாளும் இனிய நாளாக இருக்கும். உலகில் உள்ள அனைத்து சக்திகளிலும் அன்பே அதிக வலிமை படைத்தது. மனஅமைதியை முழுமையாகக் கொண்டவர்களிடம் எப்போதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும்.