<no title>

பக்கெட்களை நிரப்புவோமா.


லெரிடம் பேசும்போதுநமக்குள் நம்பிக்கை பொங்கும்அதுவரை நம்மால் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த விஷயங்களைக்கூட, இனிமேல் நிச்சயமாகச் செய்து முடித்து விடலாம் என்கிற தெம்போடு வெளியில் வருவோம்.


இதற்கு நேரெதிராக இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்களிடம் பேசினால், நம்மிடம் இருக்கிற கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் காணாமல் போய்விடும்கடைசியில், அவ்வளவுதான். இனிமேல் எதுவும் நடக்காது; இதோடு உலகமே முடிந்துவிட்டதுஎன்பது போன்ற அவநம்பிக்கைதான் மிஞ்சும்


இந்த இரண்டு வகை மனிதர்களில்யாருடன் பழகுவது நமக்குச் சந்தோஷம்கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 'அடிப்படையில், நாம் ஒவ்வொருவரும் பக்கெட்டைப்போல' என்கிறார் மேலாண்மைத் துறை ஆய்வாளர், எழுத்தாளர் டாம் ராத். 'பக்கெட் முழுதாக நிரம்பித் தளும்பும்போதுமிகவும் உற்சாகமாக உணருகிறோம்தண்ணீர் குறைந்து வற்றிப்போகும் போதுசோர்ந்து விடுகிறோம்'.